Search This Blog

Thursday 7 April 2011

விடுகதைகள்.

அழுவேன், சிரிப்பேன் அனைத்தும் செய்வேன் நான் யார்?
முகம் பார்க்கும் கண்ணாடி

ஆடும் வரை ஆட்டம், ஆடிய பின் ஒட்டம் அது என்ன?
இதயம்

இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
தேள்

ஊரெல்லாமல் ஒரே விளக்கு. அதற்கு ஒரு நாள் ஒய்வு அது என்ன?
நிலா

கொம்பு நிறை கம்பு அது என்ன?
மாதுளம்பழம்

தலையை சீவினால் திறப்பான் அவன் அது என்ன?
இளநீர்/நொங்கு

நாலு காலு உண்டு வீச வாலில்லை அது என்ன?
நாற்காலி

பல் துவக்ககாதவனுக்கு உடம்பு எல்லாம் பற்கள்?
சீப்பு

மண்ணுக்குள் கிடப்பவன் மங்களகரமானவன் அவன் யார்?
மஞ்சள்

முத்து வீட்டுக்குள்ளே தட்டுப் பலகை அது என்ன?
நாக்கு
 --------------------------------------------------------------------------------------------------------
குட்டைப் பெண்ணுக்குப் பட்டுப் புடவை அது என்ன ? 
வெங்காயம்
------------------------------------------------------------------------------------------------------------------------
ஆயிரம் தச்சர் கூடி  அழகான மண்டபம் கட்டி ஒருவன் கண்பட்டு உடைந்ததாம் மண்டபம். அது என்ன ?
தேன்கூடு
--------------------------------------------------------------------------------------------------------------------------
சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன?
தீக்குச்சி
---------------------------------------------------------------------------------------------------------------------------------
தலை மட்டும் கொண்‌ட சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும்?
தபால் தலை
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன் யார்?
கடல் அலை