Search This Blog

Tuesday 30 August 2011

அறிவியல் கண்காட்சி .

அறிவியல் படைப்புகள் மாணவர்களின் சிந்தனையை தூண்ட வல்லது, மேலும் கூர்ந்து கவனிக்கும் அறிவினையும் வளர்க்க வல்லது. அதற்கேற்றவாறு எங்கள் பள்ளியில் அறிவியல் கண்காட்சி 2011 யை செம்மையாக எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. K.லட்சுமி நாராயணன் மற்றும் எங்கள் முதலாம் வட்ட ஆய்வாளர் த.அமிர்தகணேசன் முன்னிலையில் 30 -08 -2011  அன்று மாலை 2 :30 மணி அளவில் எங்கள் பள்ளி வளாகத்தில் நடத்தினோம். தலைமைஆசிரியர் திரு.அ.ராஜாராமன் மற்றும் ஆசிரியைகள் திருமதி.சுமதி , திருமதி லீமா ரோஸ், திருமதி.தர்மாம்பாள் , திருமதி.புஷ்பா ஆரோக்கியமரி மற்றும் செல்வி.ஜோ.தனலக்ஷ்மி ஆகியோர் விழாவிற்காண ஏற்பாடுகளை செய்திருந்தனர் .விழாவில் மாணவர்களின் படைப்பு சுமார் 65 படைப்புகள் இடம்பெற்றது. புவி வேப்பமையமாதல், சொட்டு நீர் பாசனம் , மழை நீர் சேகரிப்பு இதில் முக்கிய பங்கு வகித்தது. மாணவர்கள் செய்து காண்பித்த பல்வேறு சோதனைகளும் இடம்பெற்றன.





































Saturday 20 August 2011

CRC MEETING ON 20-08-2011.

Cluster Resource Center have been functioning as Centres of teacher empowerment, where the teachers share their experiences and innovative practices in the teaching learning processes. The monthly CRC meetings have been primarily planned for sharing innovative practices in classrooms by the teachers. The meetings have now been used for discussing the implementation and strengthening of  Active Teaching- Learning Methodology. Thus, the teachers are also trained on effective use of these methodologies during these meetings.  The capacity-building initiatives adopted by the State both for the teachers  have resulted in improving classroom processes and improvement in achievement levels of children.The meeting initializing the above mentioned goals was conducted on 20-08-2011 at Vivekananda Matriculation Hr.Sec. School, Lawspet from 2.30 pm to 6.40 pm. The Deputy Inspector of Schools Zone-1, Mr.Amirthaganesan initiated this programme in zone-1.The commitee formed with Headmasters and Teachers  organised various activities like,

1)Model teaching - Demo
2)Games for teachers
3)Discussion  

Monday 15 August 2011

சுதந்திர இந்தியாவை காப்பதில் இளைஞர்களின் பங்கு!

சுதந்திர இந்தியாவைக் காப்பதில் முக்கியப் பங்கு இளைஞர்களுக்குத்தான் உள்ளது. இன்றைய இளைஞர்கள்தான் இந்தியாவின் எதிர்காலம்.ஏனெனில்,இளைஞர்கள் எவ்வாறு அமைகிறார்களோ அந்த வகையில்தான் இந்தியா செல்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் இந்தியாவின் நலனில் அக்கறை உள்ளது.சுபாஷ் சந்திர போசும், கொடிகாத்த குமரனும், வீரபாண்டிய கட்டபொம்மனும், கப்பலோட்டிய தமிழனும், அடிமைபட்டுக் கிடந்த இந்தியாவை சுதந்திர இந்தியாவாக மாற்றிய தலைவர்கள் பட்டியலில் இடம்பிடித்த இளைஞர்களாவர்.நம் நாடு, நம் மக்கள் என்ற உணர்வுடன், இப்போதே உறுதி செய்யுங்கள். நாட்டின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் பாதுகாப்போம் என்று.


தொலைநோக்குப் பார்வை அவசியம்
படித்து முடித்து வேலைக்குப் போய் கை நிறைய அல்லது பர்ஸ் நிறைய சம்பாதித்தால் போதும் என்ற குறுகிய மனப்பான்மை அல்லாமல், பிறந்ததே சாதிப்பதற்குத்தான் என்று இலட்சியத்துடன் வாழும் இளைஞர் சமுதாயமே இந்தியாவிற்கு வேண்டும்.இளைய சமுதாயமே கனவு காணுங்கள் என்று கூறுகிறார் நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். ஒவ்வொருவரும் காணும் கனவு நிச்சயம் நினைவாகும். ஆனால் அதற்கு நாம் தான் உழைக்க வேண்டும்.                         
பள்ளிப் படிப்பின் போதே ஒரு லட்சியத்தை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். லட்சியப் பாதையில் எத்தனையோ சறுக்கல்களும், தோல்விகளும் நம் பயணத்தை தடை செய்யக் கூடும். ஆனால், தோல்வி நமது வாழ்க்கைக்கு வேண்டுமானால் பாதிப்பை ஏற்படுத்தலாம், வருமானத்தை பாதிக்கலாம், உறவைக் கூட பாதிக்கலாம். ஆனால் தோல்வி என்பது நம் தன்னம்பிக்கையை எந்த வகையிலும் பாதிக்கக் கூடாது.லட்சியப் பாதையை நோக்கி சீரான வேகத்தில் நாம் பயணிப்பதை அவ்வப்போது உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒரே வட்டத்திற்குள் சுழன்று கொண்டிருக்காமல், நாம் செல்லும் பாதையில் எல்லாம் பாதைகளை ஏற்படுத்திக் கொண்டே செல்ல வேண்டும்.
      வனத்தை அளப்போம், நிலவை தாண்டுவோம் என்று எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் நம் இளைஞர்கள் கற்பனை செய்தனர். அந்த கற்பனைதான் இன்று நிஜங்களாகிக் கொண்டிருக்கிறது.எனவே கனவு காண்பதாலோ, கற்பனைகளோ எதற்கும் பயன்படாது என நினைக்காமல், கனவுகளையும், கற்பனைகளையும் நிஜங்களாக்கும் வழி என்ன என்று சிந்தியுங்கள். நீங்கள் போகும் பாதையில் எந்த பிரச்சினையும் இல்லை என்றால், தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.இளைஞர்களே வாழ்க்கை சுமூகமாக சென்றால் போதும் என்று எண்ணாமல், சாதனைகளாகச் செல்ல வேண்டும் என்று எண்ணுங்கள். சுதந்திர இந்தியாவின் தூண்களே இளைஞர்கள்தான் என்ற தலைவர்களின் கருத்தை நிஜமாக்குங்கள்.
"நாட்டுப்பற்று மிக்க நூறு இளைஞர்களைத் தாருங்கள்;இந்தியாவை உயர்த்திக் காட்டுகிறேன்'' என்று விவேகானந்தர்கூறினார்.

 எங்கள் பள்ளியில் நடைபெற்ற கொண்டாட்டம்
                         அவ்வாறு போற்றப்படவேண்டிய சுந்ததிரத்தை எங்கள் பள்ளியில் 15 -08 -2011 அன்று பகல் 9 :00 மணி அளவில் விழாவாக கொண்டாடினோம். கொடியேற்றத்துடன் தொடங்கிய விழா நடனம், நாடகம் , பாடல், கவிதை, என பலகலைகளையும் தொட்டது. இறுதியில் தேசிய கீதத்துடன் முடிவடைந்தது. மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மிகுந்த ஆர்வத்துடன் மாணவர்கள் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்று  இவ்விழா இனிதே நடைப்பெற உதவினர். தலைமைஆசிரியர்  விழாவிற்கு தலைமைதாங்க அனைத்து ஆசிரியர்களும் கலந்துக்கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.











 





Wednesday 10 August 2011

நட்பு பற்றி குறளில் பிறந்த கதை.

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
(குறள் – 789)

(மனம் மாறுபடாமல், முடிந்த போதெல்லாம் நண்பனுக்கு உதவி நிற்கும்
தன்மையே, நட்பிற்கு வீற்றிருக்கும் சிறந்த இருக்கையாகும் என்கிறார் வள்ளுவர்)


நல்ல நண்பர்களே உலகத்தின் மிகப் பெரிய செல்வம் என்று சொல்கிறார்கள்.
நட்பு என்பது வெறுமனே உயிர் கொடுக்கும் உணர்ச்சியல்ல. நட்பு என்பது மிகமிக ஆழமான அர்த்தம் கொண்ட சொற்பதம். நட்பு என்பது தூய்மையான அன்பினால் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, இன்பத்திலும், துன்பத்திலும் பகிர்ந்து கொண்டு செயல்படுவதே நல்ல நட்பாகும். தன் நண்பனின் இன்பத்தில் பங்கு கொண்டு, துன்பத்தில் தூர ஓடுவது நல்ல நட்பிற்கு நல்லதல்ல.
ஒரு தூய்மையான நட்பானது, எப்போதும் ஒரு தாயின் அரவணைப்பைப் போல் ஓர் இனிமையான சுகத்தைக் கொடுப்பதாகும். எவ்வேளையிலும் மனம் மாறுபடாமல் முடிந்த போதெல்லாம் நண்பனுக்கு உதவி நிற்கும் தன்மையே நல்ல நட்பிற்கு வீற்றிருக்கும் சிறந்த இருக்கையாகும்.
கடல் மீது பயணம் செய்யும் வள்ளத்திற்கு துடுப்பதுவும் கைத்துணையாய்
இருந்து… கரை சேர உதவுவது போல்… ஒரு நல்ல நண்பனானவன் வாழ்கை
என்னும் பயணத்தில் துடுப்பைப் போல் உற்ற நண்பனாக இருந்து உதவுவதே
நட்பின் சிறப்பாகும். இக் கருத்தினையே வள்ளுவரும் இந்தக் குறளில் மிக
அழகாகக் கூறியுள்ளார். உண்மையான நட்பு கோடானகோடி மக்களில் ஒருவருக்குத்தான் வாய்க்கிறது
என்கிறார்கள்.

ஆம்!… மனதிலே சலிப்புத் தட்டும் போது எண்ணங்கள் யாவும் ஒடிந்து விடுகின்றன. அதைத் தூக்கி நிறுத்த எவன் ஒருவன் விசுவாசமுள்ள ஒரு நண்பனைப் பெற்று விடுகின்றானோ, அவன் தன் வாழ்க்கையில் பெரும் வெற்றியைப் பெறுவான் என்பது உண்மையே. அப்படி ஒரு நட்பினை என் வகுப்பு மாணவிகளிடம் பார்ப்பதில் பெருமை அடைகின்றேன் .

Friday 5 August 2011

மாணவர்களின் படைப்பு ...


மாணவர்களின் படைப்பு ஆற்றல் பெரும் சிறப்பு வாய்ந்தது . தூண்டுகோலாக ஆசிரியர் இருப்பின் அவர்களின் அறிவு வளர்ச்சியும் மன வளர்ச்சியும் விரிவு அடைந்துகொண்டே செல்லும். அவ்வாறு விளங்கும் குழந்தைகளுக்கு அவ்வபோது பாடப்பொருள் சார்ந்த திறன்களை அன்றி ஆற்றல், சிந்தித்தல் சார்ந்த திறன்களையும் வளர்ப்பது ஆசிரியரின் கடமை ஆகும் .அவ்வாறு எங்கள் பள்ளியில் என் வகுப்பு மாணவர்கள் இலைகள், தழைகள்,  பூக்கள் போன்றவற்றை கொண்டு இந்தியாவின் மாதிரியை வடிவமைத்தனர். இச்செயலின் பொழுது மாணவர்கள் மகிழிச்சியுடனும் மிகுந்த ஆர்வத்துடனும்  செயல்பட்டனர். அவர்களின் உள்ளே இடம்பெற்று இருந்த படைப்பு ஆற்றல் மற்றும் கலைநயம் அப்போது தான் வெளிகானப்பட்டது .உங்கள் பார்வைக்காக இங்கே.....

இடம் - வகுப்பறை

நேரம் - மாலை 2 :30 மணி 

நாள்   - 20-07-2011



அதேப்போல விலங்குகளின் மற்றும் பறவைகளின் பொம்மைகள் ஆகியவற்றின் மூலம் காடு போன்ற மாதிரி அமைப்பையும் உருவாக்கினர். பார்வைக்கு நேர்த்தியாகவும் சிறப்பாகவும் இடம்பெற்றது.

இடம் - வகுப்பறை

நேரம் - மாலை 2 :30 மணி 

நாள்   - 05-08-2011