அறிவியல் படைப்புகள் மாணவர்களின் சிந்தனையை தூண்ட வல்லது, மேலும் கூர்ந்து கவனிக்கும் அறிவினையும் வளர்க்க வல்லது. அதற்கேற்றவாறு எங்கள் பள்ளியில் அறிவியல் கண்காட்சி 2011 யை செம்மையாக எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. K.லட்சுமி நாராயணன் மற்றும் எங்கள் முதலாம் வட்ட ஆய்வாளர் த.அமிர்தகணேசன் முன்னிலையில் 30 -08 -2011 அன்று மாலை 2 :30 மணி அளவில் எங்கள் பள்ளி வளாகத்தில் நடத்தினோம். தலைமைஆசிரியர் திரு.அ.ராஜாராமன் மற்றும் ஆசிரியைகள் திருமதி.சுமதி , திருமதி லீமா ரோஸ், திருமதி.தர்மாம்பாள் , திருமதி.புஷ்பா ஆரோக்கியமரி மற்றும் செல்வி.ஜோ.தனலக்ஷ்மி ஆகியோர் விழாவிற்காண ஏற்பாடுகளை செய்திருந்தனர் .விழாவில் மாணவர்களின் படைப்பு சுமார் 65 படைப்புகள் இடம்பெற்றது. புவி வேப்பமையமாதல், சொட்டு நீர் பாசனம் , மழை நீர் சேகரிப்பு இதில் முக்கிய பங்கு வகித்தது. மாணவர்கள் செய்து காண்பித்த பல்வேறு சோதனைகளும் இடம்பெற்றன.

Search This Blog
Tuesday, 30 August 2011
Saturday, 20 August 2011
CRC MEETING ON 20-08-2011.
Cluster Resource Center have been functioning as Centres of teacher empowerment, where the teachers share their experiences and innovative practices in the teaching learning processes. The monthly CRC meetings have been primarily planned for sharing innovative practices in classrooms by the teachers. The meetings have now been used for discussing the implementation and strengthening of Active Teaching- Learning Methodology. Thus, the teachers are also trained on effective use of these methodologies during these meetings. The capacity-building initiatives adopted by the State both for the teachers have resulted in improving classroom processes and improvement in achievement levels of children.The meeting initializing the above mentioned goals was conducted on 20-08-2011 at Vivekananda Matriculation Hr.Sec. School, Lawspet from 2.30 pm to 6.40 pm. The Deputy Inspector of Schools Zone-1, Mr.Amirthaganesan initiated this programme in zone-1.The commitee formed with Headmasters and Teachers organised various activities like,
1)Model teaching - Demo
2)Games for teachers
3)Discussion
1)Model teaching - Demo
2)Games for teachers
3)Discussion
Monday, 15 August 2011
சுதந்திர இந்தியாவை காப்பதில் இளைஞர்களின் பங்கு!
சுதந்திர இந்தியாவைக் காப்பதில் முக்கியப் பங்கு இளைஞர்களுக்குத்தான் உள்ளது. இன்றைய இளைஞர்கள்தான் இந்தியாவின் எதிர்காலம்.ஏனெனில்,இளைஞர்கள் எவ்வாறு அமைகிறார்களோ அந்த வகையில்தான் இந்தியா செல்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் இந்தியாவின் நலனில் அக்கறை உள்ளது.சுபாஷ் சந்திர போசும், கொடிகாத்த குமரனும், வீரபாண்டிய கட்டபொம்மனும், கப்பலோட்டிய தமிழனும், அடிமைபட்டுக் கிடந்த இந்தியாவை சுதந்திர இந்தியாவாக மாற்றிய தலைவர்கள் பட்டியலில் இடம்பிடித்த இளைஞர்களாவர்.நம் நாடு, நம் மக்கள் என்ற உணர்வுடன், இப்போதே உறுதி செய்யுங்கள். நாட்டின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் பாதுகாப்போம் என்று.
தொலைநோக்குப் பார்வை அவசியம்
படித்து முடித்து வேலைக்குப் போய் கை நிறைய அல்லது பர்ஸ் நிறைய சம்பாதித்தால் போதும் என்ற குறுகிய மனப்பான்மை அல்லாமல், பிறந்ததே சாதிப்பதற்குத்தான் என்று இலட்சியத்துடன் வாழும் இளைஞர் சமுதாயமே இந்தியாவிற்கு வேண்டும்.இளைய சமுதாயமே கனவு காணுங்கள் என்று கூறுகிறார் நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். ஒவ்வொருவரும் காணும் கனவு நிச்சயம் நினைவாகும். ஆனால் அதற்கு நாம் தான் உழைக்க வேண்டும். பள்ளிப் படிப்பின் போதே ஒரு லட்சியத்தை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். லட்சியப் பாதையில் எத்தனையோ சறுக்கல்களும், தோல்விகளும் நம் பயணத்தை தடை செய்யக் கூடும். ஆனால், தோல்வி நமது வாழ்க்கைக்கு வேண்டுமானால் பாதிப்பை ஏற்படுத்தலாம், வருமானத்தை பாதிக்கலாம், உறவைக் கூட பாதிக்கலாம். ஆனால் தோல்வி என்பது நம் தன்னம்பிக்கையை எந்த வகையிலும் பாதிக்கக் கூடாது.லட்சியப் பாதையை நோக்கி சீரான வேகத்தில் நாம் பயணிப்பதை அவ்வப்போது உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒரே வட்டத்திற்குள் சுழன்று கொண்டிருக்காமல், நாம் செல்லும் பாதையில் எல்லாம் பாதைகளை ஏற்படுத்திக் கொண்டே செல்ல வேண்டும்.
வனத்தை அளப்போம், நிலவை தாண்டுவோம் என்று எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் நம் இளைஞர்கள் கற்பனை செய்தனர். அந்த கற்பனைதான் இன்று நிஜங்களாகிக் கொண்டிருக்கிறது.எனவே கனவு காண்பதாலோ, கற்பனைகளோ எதற்கும் பயன்படாது என நினைக்காமல், கனவுகளையும், கற்பனைகளையும் நிஜங்களாக்கும் வழி என்ன என்று சிந்தியுங்கள். நீங்கள் போகும் பாதையில் எந்த பிரச்சினையும் இல்லை என்றால், தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.இளைஞர்களே வாழ்க்கை சுமூகமாக சென்றால் போதும் என்று எண்ணாமல், சாதனைகளாகச் செல்ல வேண்டும் என்று எண்ணுங்கள். சுதந்திர இந்தியாவின் தூண்களே இளைஞர்கள்தான் என்ற தலைவர்களின் கருத்தை நிஜமாக்குங்கள்.
"நாட்டுப்பற்று மிக்க நூறு இளைஞர்களைத் தாருங்கள்;இந்தியாவை உயர்த்திக் காட்டுகிறேன்'' என்று விவேகானந்தர்கூறினார்.
எங்கள் பள்ளியில் நடைபெற்ற கொண்டாட்டம்
அவ்வாறு போற்றப்படவேண்டிய சுந்ததிரத்தை எங்கள் பள்ளியில் 15 -08 -2011 அன்று பகல் 9 :00 மணி அளவில் விழாவாக கொண்டாடினோம். கொடியேற்றத்துடன் தொடங்கிய விழா நடனம், நாடகம் , பாடல், கவிதை, என பலகலைகளையும் தொட்டது. இறுதியில் தேசிய கீதத்துடன் முடிவடைந்தது. மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மிகுந்த ஆர்வத்துடன் மாணவர்கள் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்று இவ்விழா இனிதே நடைப்பெற உதவினர். தலைமைஆசிரியர் விழாவிற்கு தலைமைதாங்க அனைத்து ஆசிரியர்களும் கலந்துக்கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
Wednesday, 10 August 2011
நட்பு பற்றி குறளில் பிறந்த கதை.
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. (குறள் – 789)
நல்ல நண்பர்களே உலகத்தின் மிகப் பெரிய செல்வம் என்று சொல்கிறார்கள்.
நட்பு என்பது வெறுமனே உயிர் கொடுக்கும் உணர்ச்சியல்ல. நட்பு என்பது மிகமிக ஆழமான அர்த்தம் கொண்ட சொற்பதம். நட்பு என்பது தூய்மையான அன்பினால் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, இன்பத்திலும், துன்பத்திலும் பகிர்ந்து கொண்டு செயல்படுவதே நல்ல நட்பாகும். தன் நண்பனின் இன்பத்தில் பங்கு கொண்டு, துன்பத்தில் தூர ஓடுவது நல்ல நட்பிற்கு நல்லதல்ல.
ஒரு தூய்மையான நட்பானது, எப்போதும் ஒரு தாயின் அரவணைப்பைப் போல் ஓர் இனிமையான சுகத்தைக் கொடுப்பதாகும். எவ்வேளையிலும் மனம் மாறுபடாமல் முடிந்த போதெல்லாம் நண்பனுக்கு உதவி நிற்கும் தன்மையே நல்ல நட்பிற்கு வீற்றிருக்கும் சிறந்த இருக்கையாகும்.
கடல் மீது பயணம் செய்யும் வள்ளத்திற்கு துடுப்பதுவும் கைத்துணையாய்
இருந்து… கரை சேர உதவுவது போல்… ஒரு நல்ல நண்பனானவன் வாழ்கை
என்னும் பயணத்தில் துடுப்பைப் போல் உற்ற நண்பனாக இருந்து உதவுவதே
நட்பின் சிறப்பாகும். இக் கருத்தினையே வள்ளுவரும் இந்தக் குறளில் மிக
அழகாகக் கூறியுள்ளார். உண்மையான நட்பு கோடானகோடி மக்களில் ஒருவருக்குத்தான் வாய்க்கிறது
என்கிறார்கள்.
ஆம்!… மனதிலே சலிப்புத் தட்டும் போது எண்ணங்கள் யாவும் ஒடிந்து விடுகின்றன. அதைத் தூக்கி நிறுத்த எவன் ஒருவன் விசுவாசமுள்ள ஒரு நண்பனைப் பெற்று விடுகின்றானோ, அவன் தன் வாழ்க்கையில் பெரும் வெற்றியைப் பெறுவான் என்பது உண்மையே. அப்படி ஒரு நட்பினை என் வகுப்பு மாணவிகளிடம் பார்ப்பதில் பெருமை அடைகின்றேன் .
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. (குறள் – 789)
(மனம் மாறுபடாமல், முடிந்த போதெல்லாம் நண்பனுக்கு உதவி நிற்கும்
தன்மையே, நட்பிற்கு வீற்றிருக்கும் சிறந்த இருக்கையாகும் என்கிறார் வள்ளுவர்)
நல்ல நண்பர்களே உலகத்தின் மிகப் பெரிய செல்வம் என்று சொல்கிறார்கள்.
நட்பு என்பது வெறுமனே உயிர் கொடுக்கும் உணர்ச்சியல்ல. நட்பு என்பது மிகமிக ஆழமான அர்த்தம் கொண்ட சொற்பதம். நட்பு என்பது தூய்மையான அன்பினால் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, இன்பத்திலும், துன்பத்திலும் பகிர்ந்து கொண்டு செயல்படுவதே நல்ல நட்பாகும். தன் நண்பனின் இன்பத்தில் பங்கு கொண்டு, துன்பத்தில் தூர ஓடுவது நல்ல நட்பிற்கு நல்லதல்ல.
ஒரு தூய்மையான நட்பானது, எப்போதும் ஒரு தாயின் அரவணைப்பைப் போல் ஓர் இனிமையான சுகத்தைக் கொடுப்பதாகும். எவ்வேளையிலும் மனம் மாறுபடாமல் முடிந்த போதெல்லாம் நண்பனுக்கு உதவி நிற்கும் தன்மையே நல்ல நட்பிற்கு வீற்றிருக்கும் சிறந்த இருக்கையாகும்.
கடல் மீது பயணம் செய்யும் வள்ளத்திற்கு துடுப்பதுவும் கைத்துணையாய்
இருந்து… கரை சேர உதவுவது போல்… ஒரு நல்ல நண்பனானவன் வாழ்கை
என்னும் பயணத்தில் துடுப்பைப் போல் உற்ற நண்பனாக இருந்து உதவுவதே
நட்பின் சிறப்பாகும். இக் கருத்தினையே வள்ளுவரும் இந்தக் குறளில் மிக
அழகாகக் கூறியுள்ளார். உண்மையான நட்பு கோடானகோடி மக்களில் ஒருவருக்குத்தான் வாய்க்கிறது
என்கிறார்கள்.
ஆம்!… மனதிலே சலிப்புத் தட்டும் போது எண்ணங்கள் யாவும் ஒடிந்து விடுகின்றன. அதைத் தூக்கி நிறுத்த எவன் ஒருவன் விசுவாசமுள்ள ஒரு நண்பனைப் பெற்று விடுகின்றானோ, அவன் தன் வாழ்க்கையில் பெரும் வெற்றியைப் பெறுவான் என்பது உண்மையே. அப்படி ஒரு நட்பினை என் வகுப்பு மாணவிகளிடம் பார்ப்பதில் பெருமை அடைகின்றேன் .
Friday, 5 August 2011
மாணவர்களின் படைப்பு ...
மாணவர்களின் படைப்பு ஆற்றல் பெரும் சிறப்பு வாய்ந்தது . தூண்டுகோலாக ஆசிரியர் இருப்பின் அவர்களின் அறிவு வளர்ச்சியும் மன வளர்ச்சியும் விரிவு அடைந்துகொண்டே செல்லும். அவ்வாறு விளங்கும் குழந்தைகளுக்கு அவ்வபோது பாடப்பொருள் சார்ந்த திறன்களை அன்றி ஆற்றல், சிந்தித்தல் சார்ந்த திறன்களையும் வளர்ப்பது ஆசிரியரின் கடமை ஆகும் .அவ்வாறு எங்கள் பள்ளியில் என் வகுப்பு மாணவர்கள் இலைகள், தழைகள், பூக்கள் போன்றவற்றை கொண்டு இந்தியாவின் மாதிரியை வடிவமைத்தனர். இச்செயலின் பொழுது மாணவர்கள் மகிழிச்சியுடனும் மிகுந்த ஆர்வத்துடனும் செயல்பட்டனர். அவர்களின் உள்ளே இடம்பெற்று இருந்த படைப்பு ஆற்றல் மற்றும் கலைநயம் அப்போது தான் வெளிகானப்பட்டது .உங்கள் பார்வைக்காக இங்கே.....
இடம் - வகுப்பறை
நேரம் - மாலை 2 :30 மணி
நாள் - 20-07-2011
அதேப்போல விலங்குகளின் மற்றும் பறவைகளின் பொம்மைகள் ஆகியவற்றின் மூலம் காடு போன்ற மாதிரி அமைப்பையும் உருவாக்கினர். பார்வைக்கு நேர்த்தியாகவும் சிறப்பாகவும் இடம்பெற்றது.
நேரம் - மாலை 2 :30 மணி
நாள் - 05-08-2011
Sunday, 3 July 2011
கல்வியின் சிறப்பு .
கல்வியின் சிறப்பு
வளைய வேண்டுமென்பதற்காக
-நீதிவெண்பா .7
கற்கும் போது கசப்பாயும், கற்ற பின் கரும்பினை போல் சுவையாக சுவைப்பது கல்வி.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ச்சமூகம் கல்வியின் மேன்மைமை
உணர்ந்த சமூகமாக விளங்கியது. கற்றாரையே மேன்மக்களாக மதித்துப் போற்றி மகிழ்ந்தது.
கல்வியில் காலூன்றி,கலை,பண்பாட்டில் மேலோங்கி நின்ற தமிழர்தம் நாகரீக வாழ்க்கை உலகையே வியக்க வைத்த வழிகாட்டி வாழ்க்கை என்பதை உணர்ந்து புகழ்ந்துள்ளனர் பிறநாட்டு வரலாற்று நல்லறிஞர்கள்.கல்வியில் பண்பட்ட ஒரு சமூகமாகத் தமிழ்ச் சமூகம் இருந்ததால்தான்
அறிவில் மேலோங்கி அன்றே விளங்கியது.
பரந்தபட்ட உலகப் பார்வையுடன்,........,,
'யாதும் ஊரே யாவரும் கேளீர்' 'தீதும் நன்றும் பிறர்தர வாரா'
என்ற மனித நேயம் தோய்ந்த வேதம் படித்து உலகிற்கே வழி காட்டியது.
குணங்களால் கொள்கைகளால், பண்பட்ட வாழ்க்கை நெறிமுறைகளால்
தலை நிமிர்ந்து நின்ற தமிழ்ச் சாதி, கல்வியை எப்படி போற்றி, வளர்த்துக்
காத்து வாழ்ந்தது என்பதை விளக்கும் ஒரு புறநானுற்றுக் கவிதை,
மனதில் பதிந்த கவிதை.
உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்,
[கல்வி கற்பிக்கும் ஆசானை எப்படி முதலில் நாம் மதிக்க வேண்டும், அந்த
ஆசானுக்கு எத்தகைய பணிவிடை செய்து அவர் வாழ்வில் வறுமை இல்லாது
உதவிகளும் செய்து பேண வேண்டும் என்பதை உணர்த்துகிறது.]
இரண்டாவது, பெற்ற தாய்கூட கல்வியிற் சிறக்க பிள்ளையையே மதிப்பாள்,
அன்பு செலுத்துவாள் என்பதையும் தெரிவிக்கிறது. அப்படி என்றால் கல்வி
இல்லாத பெண்கள் களர் நிலம் - அந்நிலத்தில் புல் விளைவதன்றி புதல்வர்கள்
விளைவதில்லை ! என்று புரட்சி கவிஞர் பாரதிதாசனார் ஏங்கினாரே, அந்த
ஏக்கத்திற்குப் பழந்தமிழகத்தில் இடமில்லை.கல்வியை மதிக்கின்ற கல்வி கற்ற பெண்களே வாழ்ந்தார்கள் என்பது தெளிவாகிறது.
மூன்றாவததாக ஆளுகின்ற அரசனும், 'ஒரு குடும்பத்தில் பிறந்தவர்களில் கல்வி கேள்விகளிற் சிறந்த அறிவுடையவனே வருக"
என வரவேற்றுப் பொறுப்புகளை அளித்துப் பெருமைப் படுத்துவான் என்று வரையறை வகுக்கிறது.
நான்காவது, தொழில் முதலாகப் பிரிந்த நால்வகைப் பிரிவினுள்ளும் கல்வியிற் சிறந்த தலைமகனுக்கு மேட்டுகுடி மகன் நான் என மார்தட்டுவனும் அடங்கியவனாவான்.
எனவே, கல்வி மேம்பட்டிருந்தால் எவனுக்கும் அடிமைப்பட்டவனில்லை என்பதை கடைசி இரண்டு வரிகள் தெளிவாக்குகின்றன.
கல்வி, கேள்விகளால் தலைநிமிர்ந்து தமிழ் சமூகத்தைப் படம் பிடித்து உலகுக்குக்காட்டுகிறது மேற்குறித்த புறநானூற்று பாட்டு.
வளைய வேண்டுமென்பதற்காக
நெருப்பில் வாட்டினும்
பொறுத்து - வளைகிற மூங்கில்
வேந்தன் அமரும் பல்லக்கில்
அவனது முடிக்குமேலே நின்று
பெருமை கொள்ளும் !
நீண்டுயர்ந்து வளரும் மூங்கிலோ
நீண்டுயர்ந்து வளரும் மூங்கிலோ
கழைக்கூத்தாடிகளின் கையக்ப்பட்டு
ஊர் ஊராய்த் திரிந்து
அவர்தம் காலடியில் மிதிபடும் !
அவர்தம் காலடியில் மிதிபடும் !
இளமையிலே வருந்திக் கற்பவர்
வளையும் மூங்கிலாய்ப் பெருமையடைவர்
வருந்திக் கல்லாதவர்
வருந்திக் கல்லாதவர்
மிதிபடும் மூங்கிலாய்ச் சிறுமையடைவர்.
வருத்தவன் வேய் அரசர் மாமுடியின் மேலாம்
வருத்த வளையாத மூங்கில்- தரித்திரமாய்
வேழம்பர் கைப்புகுந்து மேதினி எல்லாம் திரிந்து
வேழம்பர் கைப்புகுந்து மேதினி எல்லாம் திரிந்து
தாழுமவர் தம்மடிக்கீழ்த் தான்.
-நீதிவெண்பா .7
கற்கும் போது கசப்பாயும், கற்ற பின் கரும்பினை போல் சுவையாக சுவைப்பது கல்வி.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ச்சமூகம் கல்வியின் மேன்மைமை
உணர்ந்த சமூகமாக விளங்கியது. கற்றாரையே மேன்மக்களாக மதித்துப் போற்றி மகிழ்ந்தது.
கல்வியில் காலூன்றி,கலை,பண்பாட்டில் மேலோங்கி நின்ற தமிழர்தம் நாகரீக வாழ்க்கை உலகையே வியக்க வைத்த வழிகாட்டி வாழ்க்கை என்பதை உணர்ந்து புகழ்ந்துள்ளனர் பிறநாட்டு வரலாற்று நல்லறிஞர்கள்.கல்வியில் பண்பட்ட ஒரு சமூகமாகத் தமிழ்ச் சமூகம் இருந்ததால்தான்
அறிவில் மேலோங்கி அன்றே விளங்கியது.
பரந்தபட்ட உலகப் பார்வையுடன்,........,,
'யாதும் ஊரே யாவரும் கேளீர்' 'தீதும் நன்றும் பிறர்தர வாரா'
என்ற மனித நேயம் தோய்ந்த வேதம் படித்து உலகிற்கே வழி காட்டியது.
குணங்களால் கொள்கைகளால், பண்பட்ட வாழ்க்கை நெறிமுறைகளால்
தலை நிமிர்ந்து நின்ற தமிழ்ச் சாதி, கல்வியை எப்படி போற்றி, வளர்த்துக்
காத்து வாழ்ந்தது என்பதை விளக்கும் ஒரு புறநானுற்றுக் கவிதை,
மனதில் பதிந்த கவிதை.
உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்,
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே;
பிறப்பு ஓர் அன்ன உடன் வயிற்றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்
ஒரு குடிப்பிறந்த பல்லோருள்ளும்
"மூத்தோன் வருக" என்னாது, அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்,
வேற்றுமை தொ¢ந்த நாற்பாலுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,
மேற்பால் ஒருவனும் அவன் காண்படுமே.
[கல்வி கற்பிக்கும் ஆசானை எப்படி முதலில் நாம் மதிக்க வேண்டும், அந்த
ஆசானுக்கு எத்தகைய பணிவிடை செய்து அவர் வாழ்வில் வறுமை இல்லாது
உதவிகளும் செய்து பேண வேண்டும் என்பதை உணர்த்துகிறது.]
இரண்டாவது, பெற்ற தாய்கூட கல்வியிற் சிறக்க பிள்ளையையே மதிப்பாள்,
அன்பு செலுத்துவாள் என்பதையும் தெரிவிக்கிறது. அப்படி என்றால் கல்வி
இல்லாத பெண்கள் களர் நிலம் - அந்நிலத்தில் புல் விளைவதன்றி புதல்வர்கள்
விளைவதில்லை ! என்று புரட்சி கவிஞர் பாரதிதாசனார் ஏங்கினாரே, அந்த
ஏக்கத்திற்குப் பழந்தமிழகத்தில் இடமில்லை.கல்வியை மதிக்கின்ற கல்வி கற்ற பெண்களே வாழ்ந்தார்கள் என்பது தெளிவாகிறது.
மூன்றாவததாக ஆளுகின்ற அரசனும், 'ஒரு குடும்பத்தில் பிறந்தவர்களில் கல்வி கேள்விகளிற் சிறந்த அறிவுடையவனே வருக"
என வரவேற்றுப் பொறுப்புகளை அளித்துப் பெருமைப் படுத்துவான் என்று வரையறை வகுக்கிறது.
நான்காவது, தொழில் முதலாகப் பிரிந்த நால்வகைப் பிரிவினுள்ளும் கல்வியிற் சிறந்த தலைமகனுக்கு மேட்டுகுடி மகன் நான் என மார்தட்டுவனும் அடங்கியவனாவான்.
எனவே, கல்வி மேம்பட்டிருந்தால் எவனுக்கும் அடிமைப்பட்டவனில்லை என்பதை கடைசி இரண்டு வரிகள் தெளிவாக்குகின்றன.
கல்வி, கேள்விகளால் தலைநிமிர்ந்து தமிழ் சமூகத்தைப் படம் பிடித்து உலகுக்குக்காட்டுகிறது மேற்குறித்த புறநானூற்று பாட்டு.
Saturday, 25 June 2011
Monday, 20 June 2011
'சமச்சீ்ர் அரசியல்': ஸ்கூலுக்கு வரலாம்..ஆனா படிக்க வேண்டாம்!
கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுவிட்டன . ஆனால், சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் பள்ளி திறக்கப்பட்டாலும், இந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எந்தப் பாடமும் நடத்த மாட்டார்கள். இதனால் பள்ளிகள் திறந்தாலும் 'விடுமுறை' தொடர்கிறது.உயர் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை 1 மற்றும் 6ம் வகுப்பு தவிர மற்ற மாணவர்களுக்கு அடுத்த 3 வார காலத்துக்கு பாடம் நடத்த வேண்டாம் என உத்தரவிட்டனர்.
வழக்கமாக பள்ளிகள் திறந்த அன்றே மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு விடும். 1 மற்றும் 6ம் வகுப்புக்கு பாடத் திட்டத்தில் மாற்றமில்லை என்று உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்த போதிலும் அந்த வகுப்பு மாணவர்களுக்கு இன்று பாட புத்தகம் வினியோகிக்கப்படவில்லை.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், 1, 6ம் வகுப்பு பாடப் புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளது. ஆனால், அரசு அறிவிப்பு எதுவும் வரவில்லை என்பதால் வினியோகிக்கப்படவில்லை என்றார்.
எங்கள் பள்ளியில் பாடபுத்தகங்கள் வரும் வரையில் குறைந்தபட்ச கற்றல் இலக்குகளை மாணவர்கள் அடையும் வண்ணம் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துகளை அறிதல் , சொற்களை படித்தல் , வாக்கியத்தினை முழுமையாக படித்தல் , அடிப்படை வாழ்க்கை கணக்குகள் ஆகியவற்றை மாணவர்கள் அடைய நாங்கள் பயிற்சி தருகின்றோம்.
1, 6ம் வகுப்புக்கும் பாடப் புத்தகங்கள் வழங்கப்படவில்லை:
வழக்கமாக பள்ளிகள் திறந்த அன்றே மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு விடும். 1 மற்றும் 6ம் வகுப்புக்கு பாடத் திட்டத்தில் மாற்றமில்லை என்று உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்த போதிலும் அந்த வகுப்பு மாணவர்களுக்கு இன்று பாட புத்தகம் வினியோகிக்கப்படவில்லை.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், 1, 6ம் வகுப்பு பாடப் புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளது. ஆனால், அரசு அறிவிப்பு எதுவும் வரவில்லை என்பதால் வினியோகிக்கப்படவில்லை என்றார்.
அரசு ஆரம்ப பள்ளி- புதுப்பாளையம் :
எங்கள் பள்ளியில் பாடபுத்தகங்கள் வரும் வரையில் குறைந்தபட்ச கற்றல் இலக்குகளை மாணவர்கள் அடையும் வண்ணம் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துகளை அறிதல் , சொற்களை படித்தல் , வாக்கியத்தினை முழுமையாக படித்தல் , அடிப்படை வாழ்க்கை கணக்குகள் ஆகியவற்றை மாணவர்கள் அடைய நாங்கள் பயிற்சி தருகின்றோம்.
Saturday, 18 June 2011
எங்கள் மாணவமணிகளின் முத்தான அறிவியல் படைப்புகள்...
எங்கள் கல்வி துறையின் முதலாம் வட்டம் சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் இடையே அறிவியல் கண்காட்சி, ஆகஸ்ட் மாதம் 2010 ஆம் ஆண்டு அரசு ஆரம்ப பள்ளி- பெருமாள் கோவில் வீதியில் நடைபெற்றது.
இதில் எங்கள் பள்ளி மாணவமணிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு தங்கள் படைப்புக்களை காட்சிக்கு வைத்தனர்
பரிசுகளை எங்கள் பள்ளி மாணவமணிகள் பெற்றனர் .
தீபிகா -----5 ஆம் வகுப்பு
பவித்ரா ---4 ஆம் வகுப்பு
கர்ணா ----4 ஆம் வகுப்பு
ஒவ்வொரு பள்ளி அளவிலும் மூன்று
ஆசிரியர்களின் படைப்புகளின் அளவில் எங்கள் பள்ளி ஆசிரியை தனலட்சுமி. ஜோ இரண்டாம் பரிசினை பெற்றார் .
பரிசு அளிப்பு விழா அன்று மாலை அரசு ஆரம்ப பள்ளி- சாரத்தில் நடைபெற்றது. விழாவில் முதலாம் வட்ட ஆய்வாளர் திரு. அமிர்தகணேசன் , அனைவர்க்கும் கல்வி திட்ட இயக்குனர் திரு.பார்த்தசாரதி , பெண் கல்வி இயக்குனர் திருமதி. மீனாட்சி , அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.விசுவநாதன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

Friday, 20 May 2011
ஆசிரியர்- மாணவர் உறவு.
ஆசிரியர் திறம்படக் கற்பிக்கவும் மாணவர்கள் செம்மையுறக் கற்றிடவும் வகுப்பறையில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே நிலவும் நல்லிணக்கச் சூழலே ஆசிரியர் மாணவர் உறவு எனப்படும்.
பண்டைக்காலத்தில் கல்வி வாழ்வோடு கற்பிக்கப்பட்டு வந்தது. செய்து கற்றல், செய்யக்கற்றல், வாழ்ந்து கற்றல், வாழக்கற்றல் என்பதற்கிணங்க கல்வி கற்றல் என்பது வாழ்வோடு இரண்டறக் கலந்ததாக இருந்ததே தவிர தனித்துக் காணப்படவில்லை.
குருகுல முறைக்கல்வியில் ஆசிரியரும் மாணாக்கனும் தந்தை மகன் உறவு என்ற நிரைலயில் நடந்து கொண்டனர். மாணவனாக ஒரு சிறுவனை ஏற்றுக் கொண்டபின் அவனை ஆசிரியர் தமது குடும்பத்துள் ஒருவனாகக் கருதி தன்மகனிடம் அன்பு செலுத்துவது போன்று இவனிடமும் அன்பு செலுத்த வேண்டும் இதே போன்று மாணாக்கனும் ஆசிரியருக்குக் கீழ்படிந்து அவருக்கான பணிவிடைகள் பலவற்றைச் செய்ய வேண்டும்.
இன்றையச் சூழலில் ஆசிரியர் மாணவர் உறவு மேம்பட பின்வரும் வழிகளை மேற்கொள்ளலாம்.
1. அன்பு காட்டுக,
அன்பே உலகில் வலிமையானதாகும். இந்திரகதியில் இயங்கும் இன்றையச் சூழலில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் உண்மையான அன்புக்காக ஏங்குகின்றனர். தாயும், தந்தையும் பணிபுரிபவர்களாயின் அக்குழந்தைக்கு இருவரது அன்பும் கிட்டாது போய்விட வாய்ப்புள்ளது. பள்ளிக்கு வரும் மாணவனிடத்தில் ஆசிரியர் பாசமுடன் அன்பு காட்ட வேண்டும். அவர்கள் தவறுகள் செய்கின்ற போது அவை மனதில் படும் வண்ணம் சுட்டிக்காட்டி அன்பு வழியில் திருத்த வேண்டும். ஆசிரியர் தம்மீது அன்புகாட்டுகிறார் என்று உணரும் மாணவன் நல்வழியில் செல்ல ஆரம்பிக்கின்றான். ஆசிரியர் தாய்போன்று அன்பு காட்டி, தந்தை போன்று அனைத்துப் பேசி மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்பிள்ளை கூறுகிறார்.
2. அறிவுத்திறன் குறைந்தவர்களை ஆசிரியர்கள் உற்சாகப்படுத்துதல் வேண்டும்,
அறிவுத் திறன் மிகுந்த மாணவர்களைப் பாராட்டி அவர்கள் மீது மட்டும் தனிக்கவனத்தை செலுத்துதல் கூடாது. அறவுத்திறன் மிகுந்த குழந்தைகளுக்குக் கற்பித்து அவர்களை மேலும் உயர்த்துவது சிறந்ததாகாது. அறிவுத் திறன் குறைந்தவர்களுக்கு அறிவு புகட்டி அவர்களை உயர்வடையச் செய்வதே சாலச்சிறந்தது.
அறிவுத் திறன் குறைந்தவர்களை ஆசிரியர்கள் மற்ற மாணவர்கள் முன்பு தரக்குறைவாக நடத்துதல் கூடாது. அவர்களை அவ்வாறு நடத்தினால் அம்மாணவர்களின் கவனம் கல்வியில் செல்லாது. ஆசிரியர் மாணவர் உறவு பாதிப்படையும். மாறாக அறிவுத்திறன் குறைந்த மாணவர்கள் ஆர்வமுடன் கற்க முயலும் போது அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் அம்மாணவர்கள் கற்க ஊக்கமுடன் முயலுவதோடு, ஆசிரியர் மீது மிகுந்த மதிப்புடன் இருப்பர்.
3. மாணவர் இன்பத்திலும் துன்பத்திலும் பங்குபெறல்,
ஆசிரியர் மாணவர் இருவரும் இரட்டை மாட்டுவண்டியில் பூட்டப்பட்ட இரண்டு காளைமாடுகளைப் போன்றவர்களாக இருத்தல் வேண்டும். மாணவர்கள் தோல்வியுறும் போது வருந்துவர். அவர்களுக்கு உடல்சோர்வோ மனச்சோர்வோ ஏற்பட்டு அவர்கள் வருந்தும் போது அதனைத் தன்னுடையதாகக் கருதி அவர்களுக்கு ஆறுதல் கூற வேண்டும். அவர்களுடைய வருத்தத்தைத் தம்முடையதாகவும் கொண்டு அவர்களது துன்பத்திற்கு ஓர் ஊன்றுகோலாக அமைந்து அவர்களது நலம் நாடவேண்டும், அவ்வாறு செய்தால் ஆசிரியர்கள் மாணவர்கள் உறவு உன்னதநிலையை அடையும்.
மாணவர்கள் வெற்றி பெறும்போது அவர்களது வெற்றியைத் தம்முடைய வெற்றியைப் போல் கருதி மகிழ்ச்சிடையதல் வேண்டும்.
அவ்வாறு செய்தோமெனில் ஆசிரியர் கூறுகின்றவண்ணம் மாணவர்கள் மனமுவந்து நடப்பர்.
இருவரது உறவும் மேம்பாடடையும். அவர்களது வெற்றியும் அலட்சியப்படுத்துதல் கூடாது. ஆசிரியர்கள் மாணவர்களது வெற்றியில் பங்கு கொண்டு மகிழவேண்டும்.
4. மாணவர்களை ஊக்கப்படுத்துதல்;
அகல்விளக்காக இருந்தாலும் தூண்டுகோல் ஒன்று வேண்டும் என்பவர் பெரியோர். ஒவ்வொரு மாணவர்களுக்குச் சமமான வாய்ப்பைக் கொடுத்து ஊக்கமூட்டினால் அவர்கள் திறன்கள் வெளிப்படும். ஆசிரியர்கள் மாணவர்களின் திறன்கள் வெளிப்படுமாறு அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
அவர்களது திறமைகளைக் குறைத்து மதிப்பிடுதல் கூடாது. திறமைகளைக் கண்டறிந்து அதனை வளர்த்தல் வேண்டும். “ஊக்கமே ஆக்கத்திற்குச் சிறந்த வழி” என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
திறமைகளை ஊக்குவிக்கும் ஆசிரியர்களையே மாணவர்கள் அதிகம் விரும்புவர்.
5. மாணவர்களின் தவறுகளைக் களைதல்;
தவறு செய்வது மனித இயல்பு பல்வேறு சூழல்களில் இருந்து மாணவர்கள் வருவதால் வகுப்பிலும் பள்ளி வளாகத்திலும் தவறுகள் செய்ய வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு தவறுகள் மாணவர்கள் செய்யும்போது அவர்கள் அதை உணரும் வண்ணம் செய்து திருத்துதல் வேண்டும். அதற்கு மாறாக சிறிய குற்றங்களையே பெரிதாகக் காட்டி அதனை விமர்சித்தல் கூடாது. தவறுகளைச் சுட்டிக்காட்டி அவர்களைத் திருத்துதல் வேண்டும். மாணவர்கள் செய்யும் தவறுகளைக் கண்டும் காணாமல் இருத்தல் கூடாது. அது இருவரது உறவிலும் தீய விளைவுகளை ஏற்படுத்தும். மாணவர்கள் தவறுகளை உணர்ந்து மீண்டும் அதுபோன்ற தவறுகளைச் செய்யாதவாறு ஆசிரியர்கள் அவர்களைப் பார்த்துக் கொள்ளல் நலம் பயக்கும். அவ்வாறு செய்தால் மாணவர்கள் தங்களை நல்வழிப்படுத்திய ஆசிரியர்களைப் பெரிதும் மதிப்பார்கள்.
Subscribe to:
Posts (Atom)