புதுச்சேரி பள்ளிகல்வித்துறையின் வட்டம் 1 சார்பில் அறிவியல் கண்காட்சி 2011 , 02-09-2011 மற்றும் 03-09-2011 ஆகிய தேதிகளில் அரசு ஆரம்பப் பள்ளி - தட்டாஞ்சாவடியில் நடைபெற்றது. விழாவில் வட்டங்கள் - 2,3,4,5 இன் ஆய்வாளர்கள் கலந்துக்கொண்டனர். மேலும் பள்ளி கல்வி இயக்குனர் திரு. க.பன்னீர்செல்வம் , முதன்மை கல்வி அதிகாரி திரு. அனுமந்தன் , அனைவர்க்கும் கல்வி திட்ட இயக்குனர் திரு.பார்த்தசாரதி,பெண்கல்வி இயக்குனர் திருமதி.மீனாட்சி தொடக்கநிலை கல்வி இயக்குனர் திரு.ரகுபாலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டனர். விழா ஏற்பாடுகளை முதலாம் வட்ட ஆய்வாளர் திரு.அமிர்தகணேசன் மற்றும் முதலாம் வட்ட ஆசிரியர் ஆசிரியைகள் தலைமை ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.
24 பள்ளிகளின் சார்பில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அறிவியல் படைப்புக்களை செய்து பார்வைக்கு வைத்திருந்தனர். சுமார் 324 அறிவியல் படைப்புகள் விழாவில் இடம்பெற்றது.ஒவ்வொரு பள்ளிக்கும் மாணவர் படைப்புகள் சார்பில் 3 பரிசுகள் வழங்கப்பட்டன.அனைத்து ஆசிரியர் படைப்புகள் சார்பில் 3 பரிசுகளும் அனைத்து மாணவர்கள் சார்பில் 3 பரிசுகளும் வழங்கப்பட்டது.கண்காட்சி நிறைவு விழா 03-09-2011 அன்று மாலை 3:00 அளவில் நடைப்பெற்றது .மேலும் கண்காட்சியை காணவந்திருந்த அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் அறிவியல் வினாடி- வினா போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன .மேலும் ஆசிரியைகளுக்கு உப்பில் வண்ணப்பொடி பயன்படுத்தி ரங்கோலி போட்டியும் நடைபெற்றது. அதற்கு 3 பரிசுகள் வழங்கப்பட்டன . மேலும் கலந்துக்கொண்ட அனைத்து ஆசிரியைகளுக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. விழாவில் கலந்துகொண்டு அறிவியல் படைப்புகள் செய்த அனைத்து ஆசிரியர் ஆசிரியைகள் மற்றும் மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.Search This Blog
Saturday, 10 September 2011
Monday, 5 September 2011
செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர்கள் தினம். மனிதனை மனிதனாக, உருவாக்கும் சிற்பிகள் என்று ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளைச் சொல்வதுண்டு. மனிதனை முதன்மை படுத்த உரமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் என்றால் அது மிகையாகாது.
'எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு" என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர்கள் ஆசிரியர்கள் தான். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை வாழ்க்கை என்றால் என்ன? இதில் மாணவ, மாணவி சமூகத்தின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர். அதே போல் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல, மாறாக உயிரூட்டுபவர்கள்.
42 டாக்டர் பட்டம் பெற்ற டாக்டர் ராதகிருஷ்ணண் அவர்களின் பிறந்த நாளைத் தான் ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. தெளிவான, சிறப்பான மாணவ சமூகத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு முதன்மையானது என்பதை இங்கு யாரும் மறுக்கமுடியாது. அதிலும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் உழைப்பினை தான் நாம் அதிகம் பாராட்ட வேண்டும். சிறு குழந்தைகளுக்குச் பாடங்களை அடித்தோ, அல்லது மிரட்டியோ கற்றுக் கொடுக்க முடியாது. அப்படிச் சொல்லிக் கொடுத்தாலும் அவர்களுக்கு ஏறாது. குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் பொழுது அசிரியர்கள் குழந்தைகளாகவே மாறிவிட வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் தங்களின் முழுக்கவனத்தையும் ஆசிரியர்கள் மீது விழும். அப்படி குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் பொழுது அவர்களின் மழலை பேச்சும், மழலைச் சரிப்பையும் காணும் பொழுது புதிய உலகிற்குச் சென்ற ஓர்; உன்னத உணர்வு மனதில் ஏற்படும். அதே போல் கிராமத்தில் இருக்கும் பள்ளிகளில் பணியாற்றுவதில் கிடைக்கும் மகிழ்ச்சி சற்று வித்தியாசமானது. அங்கு ஆரம்பப் கல்வி படிக்கும் மாணவன் பின் வாழ்வின் எத்தகைய உயர்ந்த நிலைக்குச் சென்றாலும் அப்பள்ளியையும் ஆசிரியர்களையும் மறப்பது இல்லை. ஆசிரியர் பணியில் சேர்ந்த பொழுது ஆரம்ப கல்வியை மாணவ, மாணவிகள் முடித்துச் செல்லும் பொழுது உண்மையிலேயே பெரிய இழப்பாக இருந்தது. அது தற்பொழுது பழகிவிட்டது. ஒவ்வொருவரும் ஒரு குணம், மாறுபட்ட குணாதிசயங்கள், மாறுபட்ட சிந்தனைகள் என்று ஓர்; இனிய கலவைகளை ஒரே இடத்தில் பார்க்க நினைத்தால் பள்ளிகளுக்குச் செல்லலாம்.
அர்ச்சுணனுக்கு ஒரு துரோணாச்சாரியார் போல்,விவேகானந்தருக்கு ஒரு ராமகிருஷ்ண பரமஹம்சரைப் போல் ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் ஓர்; ஆசிரியர்கள் இன்றும் வாழ்வியல் ஆசானாக இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு நாட்டின் எதிர்கால தலைவிதி ஒவ்வொரு வகுப்பறைகளிலும் உருவாக்கப்படுகிறது என்பதை ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சிறந்த ஆசிரியர்கள் என்பவர்கள் செயலுக்கும் சொல்லுக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பவர்களாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் ஆசிரியர் பணி சிறப்பாக போற்றப்படும். மாதா பிதா குரு தெய்வம் என்று தான் சொல்கிறோம். மாதா பிதா டாக்டர், இன்ஜினியர் என்று நாம் சொல்வது இல்லை. தமிழ்சிறப்பாயிரம் பாடலில் சொன்னது போல் அன்னையும் தந்தையும் ஒரு குழந்தையை உலகிற்கு தருகின்றனர். ஆனால் ஒரு ஆசிரியன் உலகத்தையே குழந்தைகளுக்கு தருகிறான்.
ஒரு சமயம் அரிஸ்டாட்டில் தம் மாணவருடன் ஆற்றின் கரைக்கு வந்தார். மாணவர்களை கரையில் நிற்க வைத்தவர், நான் ஆற்றின் அக்கறை வரையில் சென்று ஆற்றில் ஏதாவது சுழல்கள் உள்ளதா என பார்த்து வருகிறேன் என்றார். அவர் ஆயத்தம் கொண்ட சமயம், அவரின் ஒரு மாணவர் தண்ணீரில் நீந்தி செல்வதை கண்டார். மறு கரை வரை சென்று திரும்பிய மாணவர், குருவே, சுழல்கள் இல்லை., நாம் தைரியமாய் ஆற்றை கடக்கலாம் என்றார். அந்த நிலையில், அரிஸ்ட்டாட்டில், உன்னை சுழல்கள் எடுத்து சென்றிருந்தால் என்னவாகி இருக்கும் என்றார். அதற்கு அந்த மாணவன், இந்த அலக்சாண்டர் போனால், ஆயிரம் அலேக்சாண்டர்களை உருவாக்கும் வல்லமை உள்ளவர் நீங்கள். ஆனால் ஒரு அரிதான குருவை இழந்தால் நாங்கள் பரிதவித்து போவோம் என்றான். அப்படி ஆசிரியர் மாணவர் உறவு அமைவது நல்ல சமூகத்துக்கு புது சுவாசத்தை கொணரும்.
எங்கள் பள்ளியில் இன்று ஆசிரியர் நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. K.லட்சுமி நாராயணன் மற்றும் அரிமா சங்கம் ப்ரைடு சார்பில் கலந்துக்கொண்டு எங்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து பரிசு தந்து கௌரவப்படுத்தினார்.
'எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு" என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர்கள் ஆசிரியர்கள் தான். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை வாழ்க்கை என்றால் என்ன? இதில் மாணவ, மாணவி சமூகத்தின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர். அதே போல் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல, மாறாக உயிரூட்டுபவர்கள்.
அர்ச்சுணனுக்கு ஒரு துரோணாச்சாரியார் போல்,விவேகானந்தருக்கு ஒரு ராமகிருஷ்ண பரமஹம்சரைப் போல் ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் ஓர்; ஆசிரியர்கள் இன்றும் வாழ்வியல் ஆசானாக இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு நாட்டின் எதிர்கால தலைவிதி ஒவ்வொரு வகுப்பறைகளிலும் உருவாக்கப்படுகிறது என்பதை ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சிறந்த ஆசிரியர்கள் என்பவர்கள் செயலுக்கும் சொல்லுக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பவர்களாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் ஆசிரியர் பணி சிறப்பாக போற்றப்படும். மாதா பிதா குரு தெய்வம் என்று தான் சொல்கிறோம். மாதா பிதா டாக்டர், இன்ஜினியர் என்று நாம் சொல்வது இல்லை. தமிழ்சிறப்பாயிரம் பாடலில் சொன்னது போல் அன்னையும் தந்தையும் ஒரு குழந்தையை உலகிற்கு தருகின்றனர். ஆனால் ஒரு ஆசிரியன் உலகத்தையே குழந்தைகளுக்கு தருகிறான்.
ஒரு சமயம் அரிஸ்டாட்டில் தம் மாணவருடன் ஆற்றின் கரைக்கு வந்தார். மாணவர்களை கரையில் நிற்க வைத்தவர், நான் ஆற்றின் அக்கறை வரையில் சென்று ஆற்றில் ஏதாவது சுழல்கள் உள்ளதா என பார்த்து வருகிறேன் என்றார். அவர் ஆயத்தம் கொண்ட சமயம், அவரின் ஒரு மாணவர் தண்ணீரில் நீந்தி செல்வதை கண்டார். மறு கரை வரை சென்று திரும்பிய மாணவர், குருவே, சுழல்கள் இல்லை., நாம் தைரியமாய் ஆற்றை கடக்கலாம் என்றார். அந்த நிலையில், அரிஸ்ட்டாட்டில், உன்னை சுழல்கள் எடுத்து சென்றிருந்தால் என்னவாகி இருக்கும் என்றார். அதற்கு அந்த மாணவன், இந்த அலக்சாண்டர் போனால், ஆயிரம் அலேக்சாண்டர்களை உருவாக்கும் வல்லமை உள்ளவர் நீங்கள். ஆனால் ஒரு அரிதான குருவை இழந்தால் நாங்கள் பரிதவித்து போவோம் என்றான். அப்படி ஆசிரியர் மாணவர் உறவு அமைவது நல்ல சமூகத்துக்கு புது சுவாசத்தை கொணரும்.
எங்கள் பள்ளியில் இன்று ஆசிரியர் நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. K.லட்சுமி நாராயணன் மற்றும் அரிமா சங்கம் ப்ரைடு சார்பில் கலந்துக்கொண்டு எங்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து பரிசு தந்து கௌரவப்படுத்தினார்.
Tuesday, 30 August 2011
அறிவியல் கண்காட்சி .
அறிவியல் படைப்புகள் மாணவர்களின் சிந்தனையை தூண்ட வல்லது, மேலும் கூர்ந்து கவனிக்கும் அறிவினையும் வளர்க்க வல்லது. அதற்கேற்றவாறு எங்கள் பள்ளியில் அறிவியல் கண்காட்சி 2011 யை செம்மையாக எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. K.லட்சுமி நாராயணன் மற்றும் எங்கள் முதலாம் வட்ட ஆய்வாளர் த.அமிர்தகணேசன் முன்னிலையில் 30 -08 -2011 அன்று மாலை 2 :30 மணி அளவில் எங்கள் பள்ளி வளாகத்தில் நடத்தினோம். தலைமைஆசிரியர் திரு.அ.ராஜாராமன் மற்றும் ஆசிரியைகள் திருமதி.சுமதி , திருமதி லீமா ரோஸ், திருமதி.தர்மாம்பாள் , திருமதி.புஷ்பா ஆரோக்கியமரி மற்றும் செல்வி.ஜோ.தனலக்ஷ்மி ஆகியோர் விழாவிற்காண ஏற்பாடுகளை செய்திருந்தனர் .விழாவில் மாணவர்களின் படைப்பு சுமார் 65 படைப்புகள் இடம்பெற்றது. புவி வேப்பமையமாதல், சொட்டு நீர் பாசனம் , மழை நீர் சேகரிப்பு இதில் முக்கிய பங்கு வகித்தது. மாணவர்கள் செய்து காண்பித்த பல்வேறு சோதனைகளும் இடம்பெற்றன.







Saturday, 20 August 2011
CRC MEETING ON 20-08-2011.
Cluster Resource Center have been functioning as Centres of teacher empowerment, where the teachers share their experiences and innovative practices in the teaching learning processes. The monthly CRC meetings have been primarily planned for sharing innovative practices in classrooms by the teachers. The meetings have now been used for discussing the implementation and strengthening of Active Teaching- Learning Methodology. Thus, the teachers are also trained on effective use of these methodologies during these meetings. The capacity-building initiatives adopted by the State both for the teachers have resulted in improving classroom processes and improvement in achievement levels of children.The meeting initializing the above mentioned goals was conducted on 20-08-2011 at Vivekananda Matriculation Hr.Sec. School, Lawspet from 2.30 pm to 6.40 pm. The Deputy Inspector of Schools Zone-1, Mr.Amirthaganesan initiated this programme in zone-1.The commitee formed with Headmasters and Teachers organised various activities like,
1)Model teaching - Demo
2)Games for teachers
3)Discussion
1)Model teaching - Demo
2)Games for teachers
3)Discussion
Monday, 15 August 2011
சுதந்திர இந்தியாவை காப்பதில் இளைஞர்களின் பங்கு!
சுதந்திர இந்தியாவைக் காப்பதில் முக்கியப் பங்கு இளைஞர்களுக்குத்தான் உள்ளது. இன்றைய இளைஞர்கள்தான் இந்தியாவின் எதிர்காலம்.ஏனெனில்,இளைஞர்கள் எவ்வாறு அமைகிறார்களோ அந்த வகையில்தான் இந்தியா செல்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் இந்தியாவின் நலனில் அக்கறை உள்ளது.சுபாஷ் சந்திர போசும், கொடிகாத்த குமரனும், வீரபாண்டிய கட்டபொம்மனும், கப்பலோட்டிய தமிழனும், அடிமைபட்டுக் கிடந்த இந்தியாவை சுதந்திர இந்தியாவாக மாற்றிய தலைவர்கள் பட்டியலில் இடம்பிடித்த இளைஞர்களாவர்.நம் நாடு, நம் மக்கள் என்ற உணர்வுடன், இப்போதே உறுதி செய்யுங்கள். நாட்டின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் பாதுகாப்போம் என்று.
தொலைநோக்குப் பார்வை அவசியம்
படித்து முடித்து வேலைக்குப் போய் கை நிறைய அல்லது பர்ஸ் நிறைய சம்பாதித்தால் போதும் என்ற குறுகிய மனப்பான்மை அல்லாமல், பிறந்ததே சாதிப்பதற்குத்தான் என்று இலட்சியத்துடன் வாழும் இளைஞர் சமுதாயமே இந்தியாவிற்கு வேண்டும்.இளைய சமுதாயமே கனவு காணுங்கள் என்று கூறுகிறார் நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். ஒவ்வொருவரும் காணும் கனவு நிச்சயம் நினைவாகும். ஆனால் அதற்கு நாம் தான் உழைக்க வேண்டும். பள்ளிப் படிப்பின் போதே ஒரு லட்சியத்தை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். லட்சியப் பாதையில் எத்தனையோ சறுக்கல்களும், தோல்விகளும் நம் பயணத்தை தடை செய்யக் கூடும். ஆனால், தோல்வி நமது வாழ்க்கைக்கு வேண்டுமானால் பாதிப்பை ஏற்படுத்தலாம், வருமானத்தை பாதிக்கலாம், உறவைக் கூட பாதிக்கலாம். ஆனால் தோல்வி என்பது நம் தன்னம்பிக்கையை எந்த வகையிலும் பாதிக்கக் கூடாது.லட்சியப் பாதையை நோக்கி சீரான வேகத்தில் நாம் பயணிப்பதை அவ்வப்போது உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒரே வட்டத்திற்குள் சுழன்று கொண்டிருக்காமல், நாம் செல்லும் பாதையில் எல்லாம் பாதைகளை ஏற்படுத்திக் கொண்டே செல்ல வேண்டும்.
வனத்தை அளப்போம், நிலவை தாண்டுவோம் என்று எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் நம் இளைஞர்கள் கற்பனை செய்தனர். அந்த கற்பனைதான் இன்று நிஜங்களாகிக் கொண்டிருக்கிறது.எனவே கனவு காண்பதாலோ, கற்பனைகளோ எதற்கும் பயன்படாது என நினைக்காமல், கனவுகளையும், கற்பனைகளையும் நிஜங்களாக்கும் வழி என்ன என்று சிந்தியுங்கள். நீங்கள் போகும் பாதையில் எந்த பிரச்சினையும் இல்லை என்றால், தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.இளைஞர்களே வாழ்க்கை சுமூகமாக சென்றால் போதும் என்று எண்ணாமல், சாதனைகளாகச் செல்ல வேண்டும் என்று எண்ணுங்கள். சுதந்திர இந்தியாவின் தூண்களே இளைஞர்கள்தான் என்ற தலைவர்களின் கருத்தை நிஜமாக்குங்கள்.
"நாட்டுப்பற்று மிக்க நூறு இளைஞர்களைத் தாருங்கள்;இந்தியாவை உயர்த்திக் காட்டுகிறேன்'' என்று விவேகானந்தர்கூறினார்.
எங்கள் பள்ளியில் நடைபெற்ற கொண்டாட்டம்
அவ்வாறு போற்றப்படவேண்டிய சுந்ததிரத்தை எங்கள் பள்ளியில் 15 -08 -2011 அன்று பகல் 9 :00 மணி அளவில் விழாவாக கொண்டாடினோம். கொடியேற்றத்துடன் தொடங்கிய விழா நடனம், நாடகம் , பாடல், கவிதை, என பலகலைகளையும் தொட்டது. இறுதியில் தேசிய கீதத்துடன் முடிவடைந்தது. மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மிகுந்த ஆர்வத்துடன் மாணவர்கள் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்று இவ்விழா இனிதே நடைப்பெற உதவினர். தலைமைஆசிரியர் விழாவிற்கு தலைமைதாங்க அனைத்து ஆசிரியர்களும் கலந்துக்கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
Wednesday, 10 August 2011
நட்பு பற்றி குறளில் பிறந்த கதை.
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. (குறள் – 789)
நல்ல நண்பர்களே உலகத்தின் மிகப் பெரிய செல்வம் என்று சொல்கிறார்கள்.
நட்பு என்பது வெறுமனே உயிர் கொடுக்கும் உணர்ச்சியல்ல. நட்பு என்பது மிகமிக ஆழமான அர்த்தம் கொண்ட சொற்பதம். நட்பு என்பது தூய்மையான அன்பினால் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, இன்பத்திலும், துன்பத்திலும் பகிர்ந்து கொண்டு செயல்படுவதே நல்ல நட்பாகும். தன் நண்பனின் இன்பத்தில் பங்கு கொண்டு, துன்பத்தில் தூர ஓடுவது நல்ல நட்பிற்கு நல்லதல்ல.
ஒரு தூய்மையான நட்பானது, எப்போதும் ஒரு தாயின் அரவணைப்பைப் போல் ஓர் இனிமையான சுகத்தைக் கொடுப்பதாகும். எவ்வேளையிலும் மனம் மாறுபடாமல் முடிந்த போதெல்லாம் நண்பனுக்கு உதவி நிற்கும் தன்மையே நல்ல நட்பிற்கு வீற்றிருக்கும் சிறந்த இருக்கையாகும்.
கடல் மீது பயணம் செய்யும் வள்ளத்திற்கு துடுப்பதுவும் கைத்துணையாய்
இருந்து… கரை சேர உதவுவது போல்… ஒரு நல்ல நண்பனானவன் வாழ்கை
என்னும் பயணத்தில் துடுப்பைப் போல் உற்ற நண்பனாக இருந்து உதவுவதே
நட்பின் சிறப்பாகும். இக் கருத்தினையே வள்ளுவரும் இந்தக் குறளில் மிக
அழகாகக் கூறியுள்ளார். உண்மையான நட்பு கோடானகோடி மக்களில் ஒருவருக்குத்தான் வாய்க்கிறது
என்கிறார்கள்.
ஆம்!… மனதிலே சலிப்புத் தட்டும் போது எண்ணங்கள் யாவும் ஒடிந்து விடுகின்றன. அதைத் தூக்கி நிறுத்த எவன் ஒருவன் விசுவாசமுள்ள ஒரு நண்பனைப் பெற்று விடுகின்றானோ, அவன் தன் வாழ்க்கையில் பெரும் வெற்றியைப் பெறுவான் என்பது உண்மையே. அப்படி ஒரு நட்பினை என் வகுப்பு மாணவிகளிடம் பார்ப்பதில் பெருமை அடைகின்றேன் .
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. (குறள் – 789)
(மனம் மாறுபடாமல், முடிந்த போதெல்லாம் நண்பனுக்கு உதவி நிற்கும்
தன்மையே, நட்பிற்கு வீற்றிருக்கும் சிறந்த இருக்கையாகும் என்கிறார் வள்ளுவர்)
நல்ல நண்பர்களே உலகத்தின் மிகப் பெரிய செல்வம் என்று சொல்கிறார்கள்.
நட்பு என்பது வெறுமனே உயிர் கொடுக்கும் உணர்ச்சியல்ல. நட்பு என்பது மிகமிக ஆழமான அர்த்தம் கொண்ட சொற்பதம். நட்பு என்பது தூய்மையான அன்பினால் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, இன்பத்திலும், துன்பத்திலும் பகிர்ந்து கொண்டு செயல்படுவதே நல்ல நட்பாகும். தன் நண்பனின் இன்பத்தில் பங்கு கொண்டு, துன்பத்தில் தூர ஓடுவது நல்ல நட்பிற்கு நல்லதல்ல.
ஒரு தூய்மையான நட்பானது, எப்போதும் ஒரு தாயின் அரவணைப்பைப் போல் ஓர் இனிமையான சுகத்தைக் கொடுப்பதாகும். எவ்வேளையிலும் மனம் மாறுபடாமல் முடிந்த போதெல்லாம் நண்பனுக்கு உதவி நிற்கும் தன்மையே நல்ல நட்பிற்கு வீற்றிருக்கும் சிறந்த இருக்கையாகும்.
கடல் மீது பயணம் செய்யும் வள்ளத்திற்கு துடுப்பதுவும் கைத்துணையாய்
இருந்து… கரை சேர உதவுவது போல்… ஒரு நல்ல நண்பனானவன் வாழ்கை
என்னும் பயணத்தில் துடுப்பைப் போல் உற்ற நண்பனாக இருந்து உதவுவதே
நட்பின் சிறப்பாகும். இக் கருத்தினையே வள்ளுவரும் இந்தக் குறளில் மிக
அழகாகக் கூறியுள்ளார். உண்மையான நட்பு கோடானகோடி மக்களில் ஒருவருக்குத்தான் வாய்க்கிறது
என்கிறார்கள்.
ஆம்!… மனதிலே சலிப்புத் தட்டும் போது எண்ணங்கள் யாவும் ஒடிந்து விடுகின்றன. அதைத் தூக்கி நிறுத்த எவன் ஒருவன் விசுவாசமுள்ள ஒரு நண்பனைப் பெற்று விடுகின்றானோ, அவன் தன் வாழ்க்கையில் பெரும் வெற்றியைப் பெறுவான் என்பது உண்மையே. அப்படி ஒரு நட்பினை என் வகுப்பு மாணவிகளிடம் பார்ப்பதில் பெருமை அடைகின்றேன் .
Friday, 5 August 2011
மாணவர்களின் படைப்பு ...
மாணவர்களின் படைப்பு ஆற்றல் பெரும் சிறப்பு வாய்ந்தது . தூண்டுகோலாக ஆசிரியர் இருப்பின் அவர்களின் அறிவு வளர்ச்சியும் மன வளர்ச்சியும் விரிவு அடைந்துகொண்டே செல்லும். அவ்வாறு விளங்கும் குழந்தைகளுக்கு அவ்வபோது பாடப்பொருள் சார்ந்த திறன்களை அன்றி ஆற்றல், சிந்தித்தல் சார்ந்த திறன்களையும் வளர்ப்பது ஆசிரியரின் கடமை ஆகும் .அவ்வாறு எங்கள் பள்ளியில் என் வகுப்பு மாணவர்கள் இலைகள், தழைகள், பூக்கள் போன்றவற்றை கொண்டு இந்தியாவின் மாதிரியை வடிவமைத்தனர். இச்செயலின் பொழுது மாணவர்கள் மகிழிச்சியுடனும் மிகுந்த ஆர்வத்துடனும் செயல்பட்டனர். அவர்களின் உள்ளே இடம்பெற்று இருந்த படைப்பு ஆற்றல் மற்றும் கலைநயம் அப்போது தான் வெளிகானப்பட்டது .உங்கள் பார்வைக்காக இங்கே.....
இடம் - வகுப்பறை
நேரம் - மாலை 2 :30 மணி
நாள் - 20-07-2011
அதேப்போல விலங்குகளின் மற்றும் பறவைகளின் பொம்மைகள் ஆகியவற்றின் மூலம் காடு போன்ற மாதிரி அமைப்பையும் உருவாக்கினர். பார்வைக்கு நேர்த்தியாகவும் சிறப்பாகவும் இடம்பெற்றது.
நேரம் - மாலை 2 :30 மணி
நாள் - 05-08-2011
Subscribe to:
Posts (Atom)












