Search This Blog

Saturday 10 September 2011

வட்டம்- 1 அளவிலான அறிவியல் கண்காட்சி 2011.

                            புதுச்சேரி பள்ளிகல்வித்துறையின் வட்டம் 1 சார்பில் அறிவியல் கண்காட்சி 2011 , 02-09-2011 மற்றும்  03-09-2011 ஆகிய தேதிகளில் அரசு ஆரம்பப் பள்ளி - தட்டாஞ்சாவடியில்  நடைபெற்றது. விழாவில் வட்டங்கள் - 2,3,4,5 இன் ஆய்வாளர்கள் கலந்துக்கொண்டனர். மேலும் பள்ளி கல்வி இயக்குனர் திரு. க.பன்னீர்செல்வம் , முதன்மை கல்வி அதிகாரி திரு. அனுமந்தன் , அனைவர்க்கும் கல்வி திட்ட இயக்குனர் திரு.பார்த்தசாரதி,பெண்கல்வி இயக்குனர் திருமதி.மீனாட்சி தொடக்கநிலை கல்வி இயக்குனர் திரு.ரகுபாலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டனர். விழா ஏற்பாடுகளை முதலாம் வட்ட ஆய்வாளர்  திரு.அமிர்தகணேசன்  மற்றும் முதலாம் வட்ட ஆசிரியர் ஆசிரியைகள் தலைமை ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.
                                24 பள்ளிகளின் சார்பில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அறிவியல் படைப்புக்களை செய்து பார்வைக்கு  வைத்திருந்தனர். சுமார் 324  அறிவியல் படைப்புகள் விழாவில் இடம்பெற்றது.ஒவ்வொரு பள்ளிக்கும் மாணவர் படைப்புகள் சார்பில் 3 பரிசுகள் வழங்கப்பட்டன.அனைத்து ஆசிரியர் படைப்புகள் சார்பில் 3 பரிசுகளும் அனைத்து மாணவர்கள் சார்பில் 3 பரிசுகளும் வழங்கப்பட்டது.கண்காட்சி நிறைவு விழா 03-09-2011 அன்று மாலை 3:00 அளவில் நடைப்பெற்றது .மேலும் கண்காட்சியை காணவந்திருந்த அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் அறிவியல் வினாடி- வினா போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன .மேலும் ஆசிரியைகளுக்கு உப்பில் வண்ணப்பொடி பயன்படுத்தி ரங்கோலி போட்டியும் நடைபெற்றது. அதற்கு 3 பரிசுகள் வழங்கப்பட்டன . மேலும் கலந்துக்கொண்ட அனைத்து ஆசிரியைகளுக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும்  பரிசு வழங்கப்பட்டது. விழாவில் கலந்துகொண்டு அறிவியல் படைப்புகள் செய்த அனைத்து ஆசிரியர் ஆசிரியைகள் மற்றும் மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.






































No comments:

Post a Comment