கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுவிட்டன . ஆனால், சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் பள்ளி திறக்கப்பட்டாலும், இந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எந்தப் பாடமும் நடத்த மாட்டார்கள். இதனால் பள்ளிகள் திறந்தாலும் 'விடுமுறை' தொடர்கிறது.உயர் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை 1 மற்றும் 6ம் வகுப்பு தவிர மற்ற மாணவர்களுக்கு அடுத்த 3 வார காலத்துக்கு பாடம் நடத்த வேண்டாம் என உத்தரவிட்டனர்.
வழக்கமாக பள்ளிகள் திறந்த அன்றே மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு விடும். 1 மற்றும் 6ம் வகுப்புக்கு பாடத் திட்டத்தில் மாற்றமில்லை என்று உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்த போதிலும் அந்த வகுப்பு மாணவர்களுக்கு இன்று பாட புத்தகம் வினியோகிக்கப்படவில்லை.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், 1, 6ம் வகுப்பு பாடப் புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளது. ஆனால், அரசு அறிவிப்பு எதுவும் வரவில்லை என்பதால் வினியோகிக்கப்படவில்லை என்றார்.
எங்கள் பள்ளியில் பாடபுத்தகங்கள் வரும் வரையில் குறைந்தபட்ச கற்றல் இலக்குகளை மாணவர்கள் அடையும் வண்ணம் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துகளை அறிதல் , சொற்களை படித்தல் , வாக்கியத்தினை முழுமையாக படித்தல் , அடிப்படை வாழ்க்கை கணக்குகள் ஆகியவற்றை மாணவர்கள் அடைய நாங்கள் பயிற்சி தருகின்றோம்.
1, 6ம் வகுப்புக்கும் பாடப் புத்தகங்கள் வழங்கப்படவில்லை:
வழக்கமாக பள்ளிகள் திறந்த அன்றே மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு விடும். 1 மற்றும் 6ம் வகுப்புக்கு பாடத் திட்டத்தில் மாற்றமில்லை என்று உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்த போதிலும் அந்த வகுப்பு மாணவர்களுக்கு இன்று பாட புத்தகம் வினியோகிக்கப்படவில்லை.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், 1, 6ம் வகுப்பு பாடப் புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளது. ஆனால், அரசு அறிவிப்பு எதுவும் வரவில்லை என்பதால் வினியோகிக்கப்படவில்லை என்றார்.
அரசு ஆரம்ப பள்ளி- புதுப்பாளையம் :
எங்கள் பள்ளியில் பாடபுத்தகங்கள் வரும் வரையில் குறைந்தபட்ச கற்றல் இலக்குகளை மாணவர்கள் அடையும் வண்ணம் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துகளை அறிதல் , சொற்களை படித்தல் , வாக்கியத்தினை முழுமையாக படித்தல் , அடிப்படை வாழ்க்கை கணக்குகள் ஆகியவற்றை மாணவர்கள் அடைய நாங்கள் பயிற்சி தருகின்றோம்.
No comments:
Post a Comment