Search This Blog

Monday 15 August 2011

சுதந்திர இந்தியாவை காப்பதில் இளைஞர்களின் பங்கு!

சுதந்திர இந்தியாவைக் காப்பதில் முக்கியப் பங்கு இளைஞர்களுக்குத்தான் உள்ளது. இன்றைய இளைஞர்கள்தான் இந்தியாவின் எதிர்காலம்.ஏனெனில்,இளைஞர்கள் எவ்வாறு அமைகிறார்களோ அந்த வகையில்தான் இந்தியா செல்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் இந்தியாவின் நலனில் அக்கறை உள்ளது.சுபாஷ் சந்திர போசும், கொடிகாத்த குமரனும், வீரபாண்டிய கட்டபொம்மனும், கப்பலோட்டிய தமிழனும், அடிமைபட்டுக் கிடந்த இந்தியாவை சுதந்திர இந்தியாவாக மாற்றிய தலைவர்கள் பட்டியலில் இடம்பிடித்த இளைஞர்களாவர்.நம் நாடு, நம் மக்கள் என்ற உணர்வுடன், இப்போதே உறுதி செய்யுங்கள். நாட்டின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் பாதுகாப்போம் என்று.


தொலைநோக்குப் பார்வை அவசியம்
படித்து முடித்து வேலைக்குப் போய் கை நிறைய அல்லது பர்ஸ் நிறைய சம்பாதித்தால் போதும் என்ற குறுகிய மனப்பான்மை அல்லாமல், பிறந்ததே சாதிப்பதற்குத்தான் என்று இலட்சியத்துடன் வாழும் இளைஞர் சமுதாயமே இந்தியாவிற்கு வேண்டும்.இளைய சமுதாயமே கனவு காணுங்கள் என்று கூறுகிறார் நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். ஒவ்வொருவரும் காணும் கனவு நிச்சயம் நினைவாகும். ஆனால் அதற்கு நாம் தான் உழைக்க வேண்டும்.                         
பள்ளிப் படிப்பின் போதே ஒரு லட்சியத்தை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். லட்சியப் பாதையில் எத்தனையோ சறுக்கல்களும், தோல்விகளும் நம் பயணத்தை தடை செய்யக் கூடும். ஆனால், தோல்வி நமது வாழ்க்கைக்கு வேண்டுமானால் பாதிப்பை ஏற்படுத்தலாம், வருமானத்தை பாதிக்கலாம், உறவைக் கூட பாதிக்கலாம். ஆனால் தோல்வி என்பது நம் தன்னம்பிக்கையை எந்த வகையிலும் பாதிக்கக் கூடாது.லட்சியப் பாதையை நோக்கி சீரான வேகத்தில் நாம் பயணிப்பதை அவ்வப்போது உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒரே வட்டத்திற்குள் சுழன்று கொண்டிருக்காமல், நாம் செல்லும் பாதையில் எல்லாம் பாதைகளை ஏற்படுத்திக் கொண்டே செல்ல வேண்டும்.
      வனத்தை அளப்போம், நிலவை தாண்டுவோம் என்று எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் நம் இளைஞர்கள் கற்பனை செய்தனர். அந்த கற்பனைதான் இன்று நிஜங்களாகிக் கொண்டிருக்கிறது.எனவே கனவு காண்பதாலோ, கற்பனைகளோ எதற்கும் பயன்படாது என நினைக்காமல், கனவுகளையும், கற்பனைகளையும் நிஜங்களாக்கும் வழி என்ன என்று சிந்தியுங்கள். நீங்கள் போகும் பாதையில் எந்த பிரச்சினையும் இல்லை என்றால், தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.இளைஞர்களே வாழ்க்கை சுமூகமாக சென்றால் போதும் என்று எண்ணாமல், சாதனைகளாகச் செல்ல வேண்டும் என்று எண்ணுங்கள். சுதந்திர இந்தியாவின் தூண்களே இளைஞர்கள்தான் என்ற தலைவர்களின் கருத்தை நிஜமாக்குங்கள்.
"நாட்டுப்பற்று மிக்க நூறு இளைஞர்களைத் தாருங்கள்;இந்தியாவை உயர்த்திக் காட்டுகிறேன்'' என்று விவேகானந்தர்கூறினார்.

 எங்கள் பள்ளியில் நடைபெற்ற கொண்டாட்டம்
                         அவ்வாறு போற்றப்படவேண்டிய சுந்ததிரத்தை எங்கள் பள்ளியில் 15 -08 -2011 அன்று பகல் 9 :00 மணி அளவில் விழாவாக கொண்டாடினோம். கொடியேற்றத்துடன் தொடங்கிய விழா நடனம், நாடகம் , பாடல், கவிதை, என பலகலைகளையும் தொட்டது. இறுதியில் தேசிய கீதத்துடன் முடிவடைந்தது. மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மிகுந்த ஆர்வத்துடன் மாணவர்கள் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்று  இவ்விழா இனிதே நடைப்பெற உதவினர். தலைமைஆசிரியர்  விழாவிற்கு தலைமைதாங்க அனைத்து ஆசிரியர்களும் கலந்துக்கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.











 





1 comment:

  1. The casino - DrmCAD
    The casino. There are hundreds 광양 출장안마 of slot 양주 출장안마 machines and some are still a large 아산 출장마사지 number. I believe these machines have 춘천 출장마사지 a big impact in the gaming world. · 안양 출장안마 Slot Machines

    ReplyDelete